மதுபானக்கடையில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு மாற்ற முயன்றவர்கள் கைது


மதுபானக்கடையில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு மாற்ற முயன்றவர்கள் கைது
x
தினத்தந்தி 29 May 2019 3:45 AM IST (Updated: 28 May 2019 9:11 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே மதுபானக்கடையில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடியை சேர்ந்தவர் குருசாமி (வயது 42). இவருடன் வேலூர் மாவட்டம் துறைபாடியை சேர்ந்த ஜோசப் (36) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் வேலை முடிந்ததும், குருசாமி ரூ.2 ஆயிரத்தை கொடுத்து தேவகோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடையில் மது வாங்கி வர கூறினாராம்.

பணத்தை மதுபானக்கடையில் கொடுத்த போது, அங்கு விற்பனையாளரான கோட்டைச்சாமி என்பவர் பணத்தை வாங்கி பார்த்ததும், சந்தேகமடைந்து, மதுபானக்கடை ஊழியர்கள் உதவியுடன் ஜோசப்பை பிடித்து வைத்துக்கொண்டு போலீசுக்கு தகவல் கூறினார். இதையடுத்து தேவகோட்டை நகர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு என்பதும், அதை மதுபானக்கடையில் மாற்ற முயன்றதும் தெரியவந்ததை தொடர்ந்து ஜோசப், குருசாமி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.


Next Story