குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் 2-வது கட்ட கலந்தாய்வு ஜூன் 7-ந்தேதி நடக்கிறது


குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் 2-வது கட்ட கலந்தாய்வு ஜூன் 7-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 29 May 2019 10:15 PM GMT (Updated: 29 May 2019 7:59 PM GMT)

குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் 2-வது கட்ட கலந்தாய்வு ஜூன் 7-ந்தேதி நடக்கிறது.

குளித்தலை,

குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் உள்ள 12 இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதில் 492 இடங்கள் நிரப்பப்பட்டது. இதனையடுத்து 2-வது கட்ட கலந்தாய்வு தரவரிசை அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்தேதி நடைபெறவுள்ளது. இதில் இளநிலை தமிழ் பாடப்பிரிவில் 3 காலியிடங்களும், ஆங்கிலத்தில் 8, கணிதவியலில் 5, இயற்பியலில் 2, மின்னணுவியலில் 5, வேதியலில் 1, உணவு மற்றும் ஊட்டச்சத்துவியலில் 5, கணினி அறிவியலில் 2, கணினி பயன்பாட்டியலில் 9, வணிகவியலில் 1, வணிகவியல் (கணினி பயன்பாட்டியியலில்) 3, மேலாண்மை பாடப்பிரிவில் 9 என மொத்தம் 53 காலியிடங்கள் உள்ளன.

இட ஒதுக்கீடு அடிப்படையில்...

இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 22 இடங்கள், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் 11 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 4 இடங்கள், பட்டியல் இனத்தவருக்கான பிரிவில் 3 இடங்கள், அருந்ததியர் பிரிவில் 11 இடங்கள், பழங்குடியினர் பிரிவில் 2 இடங்கள் காலியாக உள்ளன.

மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை தாமதமாக கல்லூரியில் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களும் 2-வது கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். கல்லூரி சேர்க்கைக்கு வரும் மாணவ-மாணவிகள் தங்களின் மாற்று சான்றிதழின் அசல் மற்றும் நகல்கள் 2, சாதி சான்றிதழின் அசல், நகல்கள் 2, ஆதார் அட்டையின் அசல், நகல்கள் 2, பாஸ்போர்ட் புகைப்படங்கள் 2, கட்டணத்தொகை ஆகியவற்றை கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

Next Story