திருப்பூரில், கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை - தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்


திருப்பூரில், கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை - தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 29 May 2019 10:00 PM GMT (Updated: 29 May 2019 11:07 PM GMT)

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் சாமுண்டிபுரத்தை அடுத்த அம்மன் வீதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 48). இவருடைய மகள் தர்ஷினி (18). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரியின் முதல் செமஸ்டர் தேர்வில் அவர் குறைவாக மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது.

இதனால் அவருடைய பெற்றோர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி தர்ஷினி மிகவும் மனமுடைந்தார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மாணவி தர்ஷினி கடந்த 3-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட தர்ஷினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story