தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது
தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்திலுள்ள 9 வட்டங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
முதல் நாளான நேற்று பெரம்பூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பெரம்பூர் முதல் சேத்தி, பெரம்பூர் இரண்டாம் சேத்தி, கல்விராயன் பேட்டை, ஆலக்குடி முதன்மை மற்றும் கூடுதல், பிள்ளையார்நத்தம், சீராளுர், வெண்ணலோடை, சக்கரசாமந்தம், வண்ணாரப்பேட்டை முதன்மை மற்றும் கூடுதல் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 95 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவர்களில் 12 பட்டா மாறுதலுக்கான மனுக்கள், 5 சமூக பாதுகாப்புத் திட்ட மனுக்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி மனு ஆகியவற்றிற்கு தகுதியின் அடிப்படையில் உடனடியாக உத்தரவிட்டு ஆணைகளை வழங்கினார்்.
தொடர்ந்து, வேளாண்மைத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு தார்ப்பாயும், ஒரு பயனாளிக்கு சூரிய விளக்கு பொறியினையும் கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் நெடுஞ்செழியன், நில அளவை உதவி இயக்குனர் லூர்துசாமி, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஸ்டெல்லாஞானமணிபிரமிளா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன், தஞ்சை தாசில்தார் அருணகிரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல திருவையாறு வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தஞ்சை வருவாய் கோட்ட அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் நடுக்காவேரி சரகத்திற்குட்பட்ட திருவாலம்பொழில், நடுக்காவேரி (கிழக்கு), நடுக்காவேரி(மேற்கு), கருப்பூர், கோனேரிராஜபுரம், மன்னார்சமுத்திரம், ஈஸ்வரன்கோவில்பத்து, வரகூர், அள்ளுர், அம்பதுமேல் நகரம், குழிமாத்தூர், வெள்ளாம்பெரம்பூர் (கிழக்கு), வெள்ளாம்பெரம்பூர்(மேற்கு) ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 54 மனுக்களை அளித்தனர். இதில் தாசில்தார் இளம்மாருதி, துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக் கிழமை) கண்டியூர் சரகத்திற்குட்பட்ட பகுதிகளிலும், 4-ந் தேதி திருவையாறு சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Tags :
Next Story