பார் உரிமையாளர் தற்கொலை: மாமல்லபுரம் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் அ.தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு
மாமல்லபுரம் டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
சென்னை,
மாமல்லபுரத்தில் டி.எஸ்.பி. அலுவலகம் முன் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, மாமல்லபுரம் டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். மேலும் அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 37). காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் தண்டலம் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க. பிரமுகர்களின் டாஸ்மாக் பார்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வந்தார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. பிரமுகர் தன்னிடம் கோடிக்கணக்கில் பணத்தை பறித்து கொண்டதாகவும், போலீசார் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து நெல்லையப்பன் தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக தன்னிடம் பணம் பறித்த அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் மாமூல் கேட்ட போலீசார் பற்றிய விவரத்தை வீடியோவாக முகநூலில் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இறப்பதற்கு முன் நெல்லையப்பன் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணனை காஞ்சீபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்தார்.
இந்தநிலையில் இந்த உத்தரவை நேற்று ரத்து செய்த போலீஸ் சூப்பிரண்டு, கண்ணனை சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த தற்கொலை குறித்து நேற்று விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்டு, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்புராஜ், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோரை சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் நெல்லையப்பன் தற்கொலைக்கு காரணமானதாக கூறப்படும் திருப்போரூர் ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் ஆனந்தன் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story