மாவட்ட செய்திகள்

விருத்தாசலத்தில் கணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது + "||" + In viruthachalam, Husband and wife Arrested by beer bottle attacker

விருத்தாசலத்தில் கணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது

விருத்தாசலத்தில் கணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது
கணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம், 

விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி மீனாட்சி (வயது 35). சம்பவத்தன்று இவர் தனது கணவர் வெங்கடேசனுடன் விருத்தாசலம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த வைத்திலிங்கம் மகன் மணிவண்ணன் (40) என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென மீனாட்சியிடம் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் மீனாட்சியை ஆபாசமாக திட்டி பீர்பாட்டிலால் தாக்கினார். அதனை தடுக்க வந்த அவரது கணவர் வெங்கடேசனையும் மணிவண்ணன் தாக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவல்லிக்கேணி லாட்ஜில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் சாவு; 6 வயது மகளுக்கு தீவிர சிகிச்சை
சென்னை லாட்ஜில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி, 6 வயது மகள் மற்றும் கள்ளக்காதலி ஆகியோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. குடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி
திருவாரூர் அருகே குடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் மனைவி அடித்து கொன்றார்.
3. மதுரை அருகே, ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததால் தம்பதி தற்கொலையா?
மதுரை அருகே ஒரே கயிற்றில் தூக்கிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டனர். ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததால்தான் அவர்கள் தற்கொலை செய்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. இரட்டை பெண் குழந்தைகள் பெற்ற மனைவியை கொலை செய்த கணவர், உறவினர்கள்
ஒடிசாவில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற மனைவியை கணவர் உள்ளிட்ட உறவினர்கள் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
5. சத்ருகன் சின்கா மனைவி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்
சத்ருகன் சின்காவின் மனைவி சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...