நாளை பள்ளிகள் திறப்பு குடிதண்ணீர், அடிப்படை வசதி இல்லாத அரசு பள்ளிகள்
நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுவதையொட்டி குடி தண்ணீர், அடிப்படை வசதி இல்லாத பள்ளிகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கீரமங்கலம்,
கோடை வெயில் அதிகமாக இருந்தாலும் மாணவர்களின் நலன் கருதி திட்டமிட்டபடி கோடை விடுமுறை முடிந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும். குடிதண்ணீர், மின்சாரம், மின்விசிறி, சுகாதாரம், சுற்றுச்சூழல், அருகில் புதர்கள், செடிகள் இருந்தால் அனைத்தையும் அகற்றி மாணவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நாளுக்கு முன்பாகவே பள்ளிக்கு சென்று அனைத்து பணிகளும் நடந்துள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிதண்ணீர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் கஜா புயலில் உடைந்த சுற்றுச்சுவர்கள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் மரங்களும் அகற்றப்படாமல் கிடக்கிறது.
இதேபோல கீரமங்கலம் அருகே பெரியாளூர் மேற்கு கிராமத்தில், உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அந்த கிராமத்திற்கே குடிதண்ணீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. ஆனால் குடிதண்ணீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் பல மாதங்களாக தண்ணீர் இல்லாததால், அந்த கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விவசாய ஆழ்குழாய் கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது.
அதே நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தான் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் குடிதண்ணீர், சமையலுக்கு தண்ணீர் மற்றும் கழிவறைகளுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் இல்லாததால் பள்ளி மாணவர்களும், சமையலுக்கும் மிகவும் சிரமப்பட உள்ளனர். அதனால் மாற்று ஏற்பாடாக தற்காலிகமாக பள்ளிக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பினால் மாணவர்கள் குடிதண்ணீருக்கு அவதிப்படாமல் படிக்க வசதியாக இருக்கும். உடனடியாக மாற்று ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும். பள்ளியில் இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல வடகாடு பரமன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறும் கஜா புயலில் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படவில்லை. அதனால் பள்ளி மாணவர்களும், அப்பகுதி பொதுமக்களும் அவதிப்படும் நிலை உள்ளது.

Related Tags :
Next Story