பள்ளிக்கூடங்கள் நாளை திறப்பு: ஆட்டோக்களில் அதிக மாணவர்களை ஏற்றினால் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
குமரி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. அப்போது ஆட்டோக்களில் அதிக மாணவ- மாணவிகளை ஏற்றிச்சென்றால் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில்,
கோடை விடுமுறைக்குப்பிறகு பள்ளிக்கூடங்கள் நாளை திறக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களில் விதிகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ- மாணவிகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும். அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது. இதை மீறி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
18 வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். மாணவ- மாணவிகள் அவ்வாறு மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். பெற்றோர் இதில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். பள்ளி மாணவ- மாணவிகள் மோட்டார் சைக்கிள் ஓட்டி பிடிபட்டால் அவர்களது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீசார் மீது வழக்குப்பதிவு
நாகர்கோவிலில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். முக்கிய சந்திப்புகளில் கூடுதலாக போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் கோட்டார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. தற்போது வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வாகன விதிமுறைகளை வாகன ஓட்டிகள் அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் விபத்துகள் குறையும்.
கோட்டாரில் சப்-இன்ஸ்பெக்டர்களிடம் தகராறு செய்த பிரச்சினையில் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏட்டு கிருஷ்ணகுமார், போலீஸ்காரர் சைலஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சைலஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கருங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி மீட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மாணவி அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பிடிபட்ட பெண் மற்றும் போலீஸ்காரரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மாணவி தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.

Related Tags :
Next Story