வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளிக்கு தேசிய அளவிலான ‘சில்வர் கிரேடு’ விருது பொதுமக்கள் பாராட்டு


வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளிக்கு தேசிய அளவிலான ‘சில்வர் கிரேடு’ விருது பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 2 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளிக்கு தேசிய அளவிலான ‘சில்வர் கிரேடு’ விருது வழங்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் பாராட்டினர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் சர்.சி.வி.ராமன் அறிவியல் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கழகத்தின் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலருக்கும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாணவர்களின் அறிவியல் திறமையை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து பலரும் அறிந்து கொள்ளும் வகையில் பிரசாரங்கள் உள்பட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த செயல்பாடுகள் பலரின் பாராட்டுதல்களை பெற்று பல்வேறு அமைப்புகளின் விருதுகள் மற்றும் பரிசுகளை இப்பள்ளிக்கு பெற்று தந்துள்ளது.

‘சில்வர் கிரேடு’ விருது

அதன்படி தற்போது மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார அமைப்பின் மூலம் தேசிய அளவிலான விருதுக்கு இப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு ‘சில்வர் கிரேடு’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம், ஆசிரியர்கள் மனோகரன், வெங்கடேஷ், ஆசிரியைகள் மகேஸ்வரி, வாசுகி, சசிகலா ஆகியோரை வட்டார கல்வி அலுவலர் பழனிராசு, வர்த்தக சங்க தலைவர் ஆறுமுகம், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் பாராட்டினர். 

Next Story