மயிலாடுதுறையில் கார் டிரைவரை மிரட்டி பணம் பறிப்பு 2 பேர் கைது
மயிலாடுதுறையில் கார் டிரைவரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை சேந்தங்குடி ஆனதாண்டவபுரம் ரோடு பகுதியை சேர்ந்த ராமு. இவருடைய மகன் சிவக்குமார்(வயது29). கார் டிரைவர். இவர் மயிலாடுதுறை கால்டெக்ஸ் பஸ் நிறுத்த பகுதியில் காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு காரில் வந்து இறங்கிய 2 பேர் சிவக்குமார் பையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்து 200-ஐ பறித்துக்கொண்டு இதை வெளியில் கூறினால் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து சிவக்குமார் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அவர்கள் மணல்மேடு அருகே உள்ள திருச்சிற்றம்பலம் மேலத்தெருவை சேர்ந்த தங்கையன் மகன் கமலகண்ணன்(39), மயிலாடுதுறை சீனிவாசபுரம் மேலபட்டமங்கலத்தை சேர்ந்த திருஞானமூர்த்தி(58) என தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story