போலீசாரை வைத்து மிரட்டி திட்டங்களை நிறைவேற்றினால் கொ.ம.தே.க. பொதுமக்களுக்கு ஆதரவாக செயல்படும் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
போலீசாரை வைத்து மிரட்டி, திட்டங்களை நிறைவேற்றினால் கொ.ம.தே.க. பொதுமக்களுக்கு ஆதரவாக செயல்படும் என திருச்செங்கோட்டில் அதன் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
திருச்செங்கோடு,
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றி பெற்ற பின்பு முதல் முறையாக நேற்று திருச்செங்கோடு வந்தார். அவர் திருச்செங்கோடு பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனுடன் சென்று திருச்செங்கோட்டில் வசித்து வரும் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காளியண்ண கவுண்டரை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, அவரிடம் ஆசி பெற்றார்.
இதைத்தொடர்ந்து தனியார் தங்கும் விடுதியில் வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவருடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் நதிராஜவேல், நகர தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திகேயன், காங்கிரஸ் நகர தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தனர்.
புதிய திட்டங்கள்
பின்னர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எங்கள் கட்சியின் எம்.பி.யின் மூலம் நாமக்கல் தொகுதி முழுவதும் உள்ள தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு உரிய வேலைகள் செய்யப்படும். கோதாவரியையும், காவிரியையும் இணைப்பதுடன் நின்று விடாமல், உள்மாவட்டங்களும் பயன்பெறும் வகையில் திருமணிமுத்தாறு திட்டத்துடன் அதை இணைக்கவும், திட்டமிட்டு செயல்படுத்தவும் அழுத்தம் கொடுக்கப்படும்.
திருச்செங்கோடு நகர போக்குவரத்து நெரிசலை குறைக்க வட்டப்பாதை, மேம்பாலம் அமைப்பது போன்ற பணிகள் மத்திய அரசு உதவியுடன் உடனடியாக செய்யப்படும். சங்ககிரி ஆர்.எஸ். பகுதி மற்றும் கொக்கராயன்பேட்டை அருகே ரெயில்வே மேம்பாலம் உடனடியாக அமைக்க, அதற்கான அமைச்சரிடம் முறையீடு செய்வோம். திருச்செங்கோடு பகுதியில் விவசாயிகள், லாரி, ரிக் தொழில்கள், விசைத்தறி தொழில்கள் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, இந்த தொழில் செய்வோர் பயன் அடைய புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.
மின்பற்றாக்குறை
பா.ஜனதாவின் கடந்த கால ஆட்சியை தமிழக மக்கள் விரும்பவில்லை. எனவே தான் அவர்களுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகளையும் தமிழக மக்கள் புறக்கணித்து தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை தேர்வு செய்து உள்ளனர். எனவே தமிழகத்தில் எந்த வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தாலும் விவசாயிகளும், பொதுமக்களும் வரவேற்கும் திட்டங்களை தான் கொண்டு வரவேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் தெரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு போலீசாரை வைத்து மிரட்டி, திட்டங்களை நிறைவேற்றுவோம் என சொன்னால், நாங்கள் (கொ.ம.தே.க.) மக்களுக்கு ஆதரவாக தான் செயல்படுவோம்.
தமிழக வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு மட்டும் தான் தரவேண்டும் என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதால், மின்சார தேவை குறைந்து, மின் பற்றாக்குறையும் தெரியாமல் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story