அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்


அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 4 Jun 2019 4:15 AM IST (Updated: 4 Jun 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொரடாச்சேரி,

கொரடாச்சேரியில் ஒன்றிய விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். திருவிடைவாசல் செல்வராஜ், வடகண்டம் சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி, மாவட்ட செய்தி தொடர்பாளர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண்டு அறிக்கையினை ஒன்றிய பொருளாளர் ஜெயபால் வாசித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விஸ்வகர்மா சமூகத்தினருக்கு பணியிடங்களை உருவாக்கி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

தனி இடஒதுக்கீடு

அரசு பணிகளில் விஸ்வகர்மா சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். விஸ்வகர்மா கைவினைஞர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும். விஸ்வகர்மா ஜெயந்தியான வருகிற செப்டம்பர் 17-ந் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஒன்றிய துணை செயலாளர் ஆனந்த் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

Next Story