கீழப்புத்தூர்-அக்கரைகோட்டகம் இடையே தார்ச்சாலை அமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு


கீழப்புத்தூர்-அக்கரைகோட்டகம் இடையே தார்ச்சாலை அமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 4 Jun 2019 4:00 AM IST (Updated: 4 Jun 2019 12:10 AM IST)
t-max-icont-min-icon

கீழப்புத்தூர்-அக்கரைகோட்டகம் இடையே தார்ச்சாலை அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள கீழப்புத்தூர் கிராமத்தில் இருந்து அக்கரை கோட்டகம் கிராமம் வரையிலான மண் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாளுவன் ஆற்றின் தென்கரையில் உள்ள இந்த சாலையின் இருபுறமும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. சாலையில் ஏராளமான பள்ளங்கள் காணப்படுகின்றன.

போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இந்த சாலை மன்னார்குடி-களப்பால் சாலைக்கு செல்வதற்கு இணைப்பு சாலையாக உள்ளது. சாலை மோசமாக இருப்பதால் அக்கரைகோட்டகம், நாராயண புரம், களப்பால், கோவில் களப்பால், பட்டமடையான், திருக்களார், சோத்திரியம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோட்டூர், திருவாரூர் ஆகிய இடங்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

சீரமைக்க நடவடிக்கை

நெல் சாகுபடி பணிகளுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்கும் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க் கிறார்கள். 

Next Story