கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2019 4:45 AM IST (Updated: 4 Jun 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஆறுமுகநேரி,

தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆறுமுகநேரி மெயின் பஜாரில் கட்சி கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகர பொருளாளர் வரதராஜ், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதே போல் தென்திருப்பேரை பஸ் நிறுத்தத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் ராமஜெயம் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம் நகர தி.மு.க. சார்பில் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் அருகே கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கட்சி கொடியேற்றி கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் பாரதிகணேசன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதிக்கண்ணன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு காயாமொழி நுழைவுவாயில் அருகே தி.மு.க. ஊராட்சி செயலாளர் ராஜேஷ்வரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு உடன்குடி ஒன்றிய தி.மு.க. சார்பில் செம்மறிகுளம், மெஞ்ஞானபுரம், மாநாடு, பரமன்குறிச்சி, முந்திரிதோட்டம், சீயோன்நகர், வெள்ளாளன்விளை, புதுக்குடியேற்று, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாநாடு, முந்திரிதோட்டம் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

உடன்குடி நகர தி.மு.க. சார்பில் உடன்குடி பஸ் நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு, மெயின் பஜார் சந்திப்பு ஆகிய இடங்களில் தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலசிங் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர் அலுவலகத்தில் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர் தலைமை தாங்கி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தி.மு.க. சார்பில் அரசு பணிமனை முன்பு கட்சி கொடியேற்றி கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கொம்பையா தலைமை தாங்கி, கட்சி கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதே போல் ஸ்ரீவைகுண்டம் நகர தி.மு.க. சார்பில் தேவர்சிலை அருகே கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story