பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பான ஆலோசனை கூட்டம், நெல்லையில் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு, கும்பாபிஷே விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குவதில் இருந்து 14-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறும் வரையிலும், கோவில் மற்றும் மலை அடிவார பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் பக்தர்கள் சீராக சாமி தரிசனம் செய்திட ஏற்பாடு செய்ய வேண்டும். 9-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரையிலும் மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்களில் இருந்து திருமலைக்கோவில் அடிவாரம் வரையிலும், அதிகாலை முதல் நள்ளிரவு வரையிலும் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும். கும்பாபிஷேக விழா நடைபெறும் 14-ந்தேதி அதிகாலை முதல் அதிகளவு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.
விழா காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். கும்பாபிஷேக தினத்தன்று மலை அடிவாரப்பகுதி மற்றும் அன்னதானம் நடைபெறும் வண்டாடும் பொட்டல் பகுதியில் மருத்துவ குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். மலைக்கோவில், மலை அடிவாரப்பகுதி, வண்டாடும் பொட்டல் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனத்துடன் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். போதிய குடிநீர், மின்விளக்கு வசதி செய்ய வேண்டும். போதிய துப்புரவு பணியாளர்களை நியமித்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். போதிய அளவில் தற்காலிக கழிப்பறைகளை அமைக்க வேண்டும்.
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. மலைக்கோவிலுக்கு செல்வதற்கு சாலை அமைத்த பின்னர் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தென்காசி உதவி கலெக்டர் சவந்தரராஜன், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் துணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர் அருணாசலம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு, கும்பாபிஷே விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழா காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். கும்பாபிஷேக தினத்தன்று மலை அடிவாரப்பகுதி மற்றும் அன்னதானம் நடைபெறும் வண்டாடும் பொட்டல் பகுதியில் மருத்துவ குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். மலைக்கோவில், மலை அடிவாரப்பகுதி, வண்டாடும் பொட்டல் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனத்துடன் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். போதிய குடிநீர், மின்விளக்கு வசதி செய்ய வேண்டும். போதிய துப்புரவு பணியாளர்களை நியமித்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். போதிய அளவில் தற்காலிக கழிப்பறைகளை அமைக்க வேண்டும்.
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. மலைக்கோவிலுக்கு செல்வதற்கு சாலை அமைத்த பின்னர் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தென்காசி உதவி கலெக்டர் சவந்தரராஜன், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் துணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர் அருணாசலம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story