சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 328 மனுக்கள் குவிந்தன
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 328 மனுக்கள் குவிந்தன.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கி கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 328 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்களை துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வழங்கினார். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை காலதாமதமின்றி பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஒரு மாற்றுத்திறனாளி நபருக்கு சுயதொழில் செய்வதற்காக வங்கிக்கடன் மானியமாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையும், கை கால் கடுமையாக பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.54 ஆயிரமும், 4 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 400 மதிப்பிலான தாங்குகோல் மற்றும் 4 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பஸ் பயண சலுகை அட்டை என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.93 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், உதவி கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம் சாரதா ருக்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story