சபாநாயகர் பதவி கிடைக்காததால் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் திடீர் போராட்டம், காரையும் ஒப்படைத்ததால் பரபரப்பு
சபாநாயகர் பதவி கிடைக்காததால் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் சட்டசபையில் திடீரென போராட்டம் நடத்தினார்கள். அரசு காரையும் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை சட்டசபை சபாநாயகர் பதவியை பெற முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தீவிரமாக முயற்சி செய்தார். பலமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்ற அடிப்படையில் அந்த பதவியை கேட்டு வந்தார். அவரது ஆதரவாளர்களும் அவருக்கு இந்த பதவி கிடைக்கும் என்று நம்பியிருந்தனர். ஆனால் சபாநாயகர் பதவிக்கு சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டார். இது லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிருப்தி காரணமாக சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. புறக்கணித்தார்.
மேலும் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தையும், சபாநாயகர் பொறுப்பேற்பு நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதற்கிடையே நேற்று அவரது ஆதரவாளர்கள் வட்டார காங்கிரஸ் தலைவர் வேல்முருகன் தலைமையில் சட்டசபைக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் தங்களது கட்சி பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் பரவியது.
லட்சுமிநாராயணனின் வீட்டில் இருந்த பெயர் பலகை மற்றும் அரசு காருடன் வந்த அவர்கள் காரை சட்டமன்ற வளாகத்தில் நிறுத்தி சாவியை ஒப்படைத்தனர். அதன்பின் நேராக முதல்-அமைச்சரின் அலுவலகம் நோக்கி சென்றனர். அந்த நேரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியின் பிறந்தநாள் விழாவுக்கு செல்ல அலுவலகத்தில் இருந்து காரை நோக்கி நடந்து சென்றார்.
அவரை முற்றுகையிட்டு பதவி வழங்காதது குறித்து லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அவர்களை சற்று நேரம் காத்திருக்குமாறு கூறிய முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதைத்தொடர்ந்து லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அமைச்சர் கந்தசாமியை சந்தித்து பேசினார்கள்.
சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்த நாராயணசாமி லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களை அழைத்து பேசினார். அப்போது கட்சி நிர்வாகிகள் தங்கள் ராஜினாமா கடிதங்களை அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கட்சி தலைமையின் முடிவுப்படி செயல்பட்டதாக அவர் தெரிவித்தார். அதன்பின் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக வட்டார காங்கிரஸ் தலைவர் வேல்முருகனிடம் கேட்டபோது, முதல்-அமைச்சரிடம் எங்களது கோரிக்கைகளை தெரிவித்தோம். அவர் கட்சி தலைமையிடம் பேசிவிட்டு தெரிவிப்பதாக கூறினார். இது எங்கள் உள்கட்சி விவகாரம் என்றார்.
இதற்கிடையே லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. நேற்று பிற்பகலில் வைத்திலிங்கம் எம்.பி. இந்த விவகாரம் தொடர்பாக லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ.வை சந்தித்து பேசினார்.

Related Tags :
Next Story