பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Jun 2019 3:45 AM IST (Updated: 4 Jun 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பள்ளிக்கு சென்றுவந்த முதல் நாளிலேயே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி ஜெகன் நகரை சேர்ந்தவர் ஜான்ரூஸ்கின். வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மகள் ஆலிவ் பிளஸ்சி (வயது15). கடந்த ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 492 மதிப்பெண் பெற்றுள்ளார்.

கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஆலிவ் பிளஸ்சி 11-ம் வகுப்பில் சேர்ந்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளான நேற்றுமுன்தினம் வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் திடீர் என்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதைபார்த்த ெபற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, வரும் வழியிலேயே மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story