கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு: நில அளவீடு கல்லை பிடுங்கி எறிந்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கூத்தாநல்லூர் அருகே கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நில அளவீடு கல்லை பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூத்தாநல்லூர்,
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஆதிவிடங்கம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான 4 ஏக்கர் வயலை, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுப்பதற்காக குத்தகைக்கு எடுத்துள்ளது. அந்த வயலில் நில அளவீடு கல் ஒன்றும் ஓ.என்.ஜி.சி. சார்பில் நடப்பட்டு உள்ளது.
ஆனால் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் வயலில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ள வயலில் நடப்பட்டிருந்த நில அளவீடு கல்லை பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளை நிலங்களில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் கோஷங்களை எழுப்பினர். அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆர்ப்பாட்டம் நீடித்தது.
இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறியதாவது:-
ஆதிவிடங்கத்தில் 4 ஏக்கர் நிலம் கச்சா எண்ணெய் எடுப்பதற்காக குத்தகைக்கு பெறப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை தொடங்க 4 ஏக்கர் நிலம் போதவில்லை.
அதனால் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இங்கு ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினர். கிராம மக்களின் திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story