கொரடாச்சேரி அருகே முன்விரோதத்தில் 2 பேர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் வாலிபருக்கு வலைவீச்சு
கொரடாச்சேரி அருகே முன்விரோதத்தில் 2 பேரை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொரடாச்சேரி.
கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பனை சேர்ந்தவர் முரளி (வயது 29). இவருடைய உறவினர் அருண் (19). திருக்கண்மங்கையை சேர்ந்த இளையராஜா(30) என்பவருக்கும், முரளிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் முரளியும், அருணும் அம்மையப்பன் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வழியாக சென்ற இளையராஜா, முரளியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதை அவர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இளையராஜா கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து முரளி, அருண் ஆகியோரின் தலையில் தாக்கினார். இதில் காயம் அடைந்த 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வலைவீச்சு
இதுகுறித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்வின்சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை வலைவீசி தேடி வருகிறார்.

Related Tags :
Next Story