பென்னாகரம் அருகே பள்ளி மாணவன் உள்பட 2 பேர் தற்கொலை
பென்னாகரம் அருகே பள்ளி மாணவன் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பளிஞ்சரஅள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம். மின்வாரிய ஊழியர். இவருடைய மகன் ஆதித்யா (வயது 16). இவன் ஒரு தனியார் பள்ளியில் 9-வது வகுப்பு படித்து வந்தான். இவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்தான். பள்ளிக்கு செல்லுமாறு தாயார் ரத்னா அறிவுறுத்தினார். நேற்று ஆதித்யா வீட்டில் இருந்தான். மதியம் 12 மணிஅளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதுபற்றி பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பென்னாகரம் அருகே கே.குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராதா ( 35). கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த ராதா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story