கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் காலத்தின் கட்டாயம் ‘கள்’ இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் காலத்தின் கட்டாயம் என்று ‘கள்’ இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
கரூர்,
ஈரோடு பவானிசாகர் அணை நீர்மேலாண்மையானது உரிய முறையில் செயல்படுத்தப்படாததால் கீழ்பவானி பாசனத்தில் 16 போக கடலை சாகுபடியையும், 8 போக நெல் சாகுபடியையும் இழந்துள்ளது. கரூர், திருப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிர்வாகம் நியாயமாக நடக்கிறது என நிரூபிப்போருக்கு ரூ.1 கோடி பரிசு என அறிவித்து அதனை நிரூபிக்க யாரும் முன்வராதது வருத்தம் அளிக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் அரவக் குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட நொய்யல் பாசனத்தில் விவசாய பணிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் மூலம் பவானி சாகர் அணைக்கு தண்ணீர் கொண்டுவர அரசு முயற்சிக்க வேண்டும். அப்படிசெய்தால் 2 டி.எம்.சி. தண்ணீரை பவானிசாகர் அணையிலிருந்து தொடங்கி அரவக்குறிச்சி தொகுதி அத்திப்பாளையம் நீர்தேக்கத்தில் முடிவடையும் கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் பயன்படுத்தலாம். இதை வலியுறுத்தி கீழ்பவானி பாசன பாதுகாப்பு மாநாடு வருகிற ஜூலை மாதம் 23-ந்தேதி ஈரோட்டில் நடக்கிறது. இதில் திரளான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
காலத்தின் கட்டாயம்
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டமானது காலத்தின் கட்டாயம் ஆகும். அது நிறைவேற்றப்படும் எனில் 180 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட்டு காவிரி டெல்டா பாசனத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதோடு, குடிநீர் பிரச்சினையும் தீரும். கர்நாடகாவில் இருந்து காவிரியாற்று நீரை தினந்தோறும் நீர்பங்கீடு என்கிற அடிப்படையில் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story