நெல்லை மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் இடமாற்றம்


நெல்லை மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 5 Jun 2019 4:45 AM IST (Updated: 5 Jun 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் ஆறுமுகம், ஆலங்குளம் வட்ட வழங்கல் அலுவலராகவும், நாங்குநேரி தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்து மருத்துவ விடுப்பில் சென்ற ஜெயா, நாங்குநேரி வட்ட வழங்கல் அலுவலராகவும், நாங்குநேரி தலைமையிடத்து துணை தாசில்தார் வேல்முருகன், திசையன்விளை வட்ட வழங்கல் அலுவலராகவும், பாளையங்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்வேல், கனிம வளத்துறை துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

துணைதாசில்தார் பதவியில் இருந்து பணி இறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் துணை தாசில்தார் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்ட வருவாய் அலுவலக வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி, மானூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், தனி வருவாய் ஆய்வாளர் மகாராஜன் நெல்லை உதவி கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், கோட்ட கலால் அலுவலக வருவாய் ஆய்வாளர் மணி நாங்குநேரி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.

சேரன்மாதேவி ஆதி திராவிடர் நலத்துறை வருவாய் ஆய்வாளர் சங்கரன், கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், மாவட்ட ஆய்வு குழு வருவாய் ஆய்வாளர் சண்முகவேல், ராதாபுரம் வட்ட வழங்கல் அலுவலராகவும், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், சிவகிரி துணை தாசில்தாராகவும், மாவட்ட வருவாய் அலுவலக வருவாய் ஆய்வாளர் நக்கீரன், நெல்லை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.

நெல்லை கோட்ட கலால் அலுவலக வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி, பாளையங்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர் வீரமணி, ராதாபுரம் துணை தாசில்தாராகவும், தென்காசி கோட்ட கலால் அலுவலக வருவாய் ஆய்வாளர் மைதீன் பாட்ஷா, மானூர் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், தேசிய நெடுஞ்சாலை திட்ட வருவாய் ஆய்வாளர் சீனிபாண்டி, பாளையங்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், தேசிய நெடுஞ்சாலை திட்ட வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி, கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், தென்காசி உதவி கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர் சிவன்பெருமாள், கடையநல்லூர் துணை தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.

இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிறப்பித்து உள்ளார்.

Next Story