வானவில் : ஹோண்டா ஆக்டிவா 5 ஜி ஸ்பெஷல் எடிஷன்


வானவில் : ஹோண்டா ஆக்டிவா 5 ஜி ஸ்பெஷல் எடிஷன்
x
தினத்தந்தி 5 Jun 2019 2:51 PM IST (Updated: 5 Jun 2019 2:51 PM IST)
t-max-icont-min-icon

ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆக்டிவா. இந்த மாடலில் இரண்டு புதிய வண்ணங்களைக் கொண்ட ஸ்பெஷல் எடிஷனை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

 ஸ்டாண்டர்டு மற்றும் டி.எல்.எஸ். வேரியன்ட்களாக இவை வந்துள்ளன. கண்கவர் வண்ணத்தில் வந்துள்ள இந்த மாடல்கள் மந்தைய மாடலைக் காட்டிலும் ரூ.400 மட்டுமே அதிகமாகும். லிமிடெட் எடிஷன் ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ.55,035. டீலக்ஸ் மாடல் விலை ரூ.56,900. ஸ்பெஷல் எடிஷனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்களிடம் முன்பதிவு செய்யலாம். சில்வர் பிளாக் இரட்டை வண்ணங்கள் இணைந்தது மற்றும் முத்து வெள்ளை மற்றும் தங்க நிறம் இணைந்த கலவை ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துகிறது இந்நிறுவனம். என்ஜினில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இது வழக்கம் போல 109.1 சி.சி. திறன் கொண்டது. 8 ஹெச்.பி. மற்றும் 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. பி.எஸ்.6 புகை விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. சமீப காலமாக ஸ்கூட்டர் விற்பனை சற்று மந்தமடைந்துள்ளது. இந்த நிலையைப் போக்க முடுக்கிவிடப்பட்ட முயற்சியின் ஒரு வெளிப்பாடுதான் ஸ்பெஷல் எடிஷனாகும்.

ஹோண்டா சி.பி. ஷைன்

இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஷைன். 125 சி.சி. பிரிவிலான இந்த மோட்டார் சைக்கிளில் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் விலை ரூ.60 ஆயிரமாகும். டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ.63,750 ஆகும். கருப்பு சிவப்பு வண்ணக் கலவையில், சில்வர் வண்ண சேர்க்கையோடு இது வந்துள்ளது. இரண்டு வண்ணத்திலான (டூயல் டோன்) பெட்ரோல் டேங்க், முகப்பு விளக்கை சுற்றி கிராபிக்ஸ், பக்கவாட்டு பகுதி மற்றும் பின்பகுதியில் வித்தியாசமான கண்ணைக் கவரும் வகையிலான ஸ்டிக்கர் ஆகியன சிறப்பம்சமாகும். மற்றபடி என்ஜினில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான 124.70 சி.சி. திறன், ஏர் கூல்டு, ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 10.1 ஹெச்.பி. திறனை 7,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 103 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது.

Next Story