தஞ்சை அருகே சமூக ஆர்வலர் மீது தாக்குதல் கிராமமக்கள் தர்ணா போராட்டம்


தஞ்சை அருகே சமூக ஆர்வலர் மீது தாக்குதல் கிராமமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2019 4:30 AM IST (Updated: 6 Jun 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே சமூக ஆர்வலர் மீதான தாக்குதலை கண்டித்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்தபாபு. சமூக ஆர்வலர். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவராகவும் பணிபுரிந்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த சிலர், பிளாஸ்டிக் தொட்டியை கொண்டு வந்து தண்ணீர் பிடித்து சென்றதை ஆனந்தபாபு தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், அவரை தாக்கினர். இதை தடுக்க வந்த அவரது தந்தை தர்மராஜையும் தாக்கினர். இதில் காயம் அடைந்த 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எதிர்தரப்பை சேர்ந்த ஒருவரும் காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சமூக ஆர்வலர் உள்பட 2 பேரை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கிராமமக்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை மேற்கொண்டு 2 பேரையும் தாக்கியவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story