விபத்தில் லாரி டிரைவர் படுகாயம்
வேதாரண்யத்தில் உப்பு மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலையில் ஆண்டிமடம் சூரக்குழி கிராமம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
வரதராஜன்பேட்டை,
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா ஊரக்கரை கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டியன்(வயது 52). லாரி டிரைவர். இவர் வேதாரண்யத்தில் உப்பு மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலையில் ஆண்டிமடம் சூரக்குழி கிராமம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வேகத்தடை இருப்பதை அறிந்து லாரியின் வேகத்தை குறைத்துள்ளார். பின்னால் வந்த லாரி ஒன்று செல்லபாண்டியன் ஓட்டி சென்ற லாரியின் பின்பக்கம் பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் பின்னால் வந்து மோதிய லாரி டிரைவரான திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(51) படுகாயம் அடைந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story