கரூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 பேர் முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு


கரூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 பேர் முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 6 Jun 2019 4:15 AM IST (Updated: 6 Jun 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

கரூர் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 3 பேர் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர்.

கரூர்,

கரூர் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 3 பேர் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது, புதுக்கோட்டையை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 45), கரூர் குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சிவகுமார் (58), திருச்சியை சேர்ந்த ராமசாமி (68) என்று தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களை ஆதரிக்க யாரும் இல்லை என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் மீட்டு, அவர்களுக்கு உணவு அளித்து புதிய ஆடையை வாங்கி கொடுத்தனர். பின்னர் அவர்களை கரூரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர். 

Next Story