குஜிலியம்பாறை அருகே சுரங்கப்பாதையில் சிக்கிய மில் வேன் பெண் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
குஜிலியம்பாறை அருகே மழைநீர் தேங்கிய ரெயில்வே சுரங்கப்பாதையில் தனியார் மில்வேன் சிக்கியது. இதில் அதிஷ்டவசமாக பெண் தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
குஜிலியம்பாறை,
குஜிலியம்பாறை அருகே சிலும்பாகவுண்டனூரில், கரிக்காலி செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இந்த ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் நீர் சூழ்ந்து கொண்டது.
இதனால் வேனில் வந்த பெண் தொழிலாளர்கள் கூச்சல் போட்டனர். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் வேனில் இருந்து பெண் தொழிலாளர் களை பத்திரமாக மீட்டனர். இதனால் அவர் கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
எனவே மழை பெய்யும் நேரத்தில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் கரூரில் இருந்து தனியார் மில் வேன் ஒன்று சுரங்கப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. சுரங்கப்பாதையில் அதிக மழை நீர் இல்லை என்று கருதிய டிரைவர் வேனை ஓட்டினார். ஆனால் மழைநீர் அதிகமாக தேங்கியிருந்ததால் நடுவழியில் வேன் சிக்கிக் கொண்டது.
இதனால் வேனில் வந்த பெண் தொழிலாளர்கள் கூச்சல் போட்டனர். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் வேனில் இருந்து பெண் தொழிலாளர் களை பத்திரமாக மீட்டனர். இதனால் அவர் கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
எனவே மழை பெய்யும் நேரத்தில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story