ஆய்வு செய்ய வராத கிராம நிர்வாக அலுவலரை வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த தி.மு.க. எம்.எல்.ஏ
வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்ய வராத கிராம நிர்வாக அலுவலரை வெற்றிலை, பாக்கு வைத்து தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜர் அழைத்தார்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பேரையூர் வடவாறு வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஆய்வு செய்வதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி. ராஜா சென்றார். அப்போது அங்கு அந்த பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவில்லை. இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரை செல்போனில் அழைத்தும் வரவில்லை. இதனால் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனை நேரில் சந்தித்து ஆய்வு செய்ய வருமாறு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து எம்.எல்.ஏ. கூறுகையில், இதுபோல ஆய்வுக்கு வராத அரசு அதிகாரிகளுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து இனிமேல் அழைக்க போவதாக கூறினார்.

Related Tags :
Next Story