நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2019 4:30 AM IST (Updated: 9 Jun 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட சார்நிலை கருவூல அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணைத்தலைவர் வாசு தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தமிழ்வாணன், கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் கலந்துகொண்டு பேசினார். கருவூல துறையின் செயல்பாட்டில் உள்ள புதிய கணினி குறைவான வேகத்தில் செயல்படும் நிலையில் விரைவாக சம்பள பட்டியல் தயாரிக்காத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என மிரட்டும் போக்கை அரசு கைவிட வேண்டும்.

கருவூல கணக்கு துறையில் பயன்பாட்டில் உள்ள கணினி செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய வகையில் செயல்படும் புதிய கணினி தயாராகும் வரை பழைய கணினி மூலம் சம்பள பட்டியல்களை தயாரிக்க அனுமதிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Next Story