வலங்கைமான் அருகே வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
வலங்கைமான் அருகே வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
வலங்கைமான்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருக்கருகாவூருக்கு நேற்று அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. வலங்கைமான் அருகே உள்ள ஊத்துக்காடு வளைவில் திரும்பியபோது எதிரே வந்த வேன் மீது மோதுவதை தடுக்கும் போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார். இதில் நிலைதடுமாறி பஸ் அருகே இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும்
இதுபற்றி தகவல் அறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கிளையின் நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் மூலம் வாய்க்காலில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை மீட்டனர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து நடந்த இடம் அபாயமான வளைவு ஆகும். மேலும் இந்த வளைவில் பாசன வாய்க்கால் உள்ளது. இப்பகுதியில் விபத்துக்களை தடுத்திடும் வகையில் சாலையோரத்தில் இரும்பு தடுப்புகளை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story