பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 639-க்கு விலைபோனது
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 639-க்கு விலைபோனது.
பாபநாசம்,
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, பாபநாசம் கண்காணிப்பாளர் பிரியமாலினி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் திருவையாத்துக்குடி, களஞ்சேரி, மாலாபுரம், வாழ்க்கை உள்ளிட்ட பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 93 விவசாயிகள், 119 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கும்பகோணம், செம்பனார்கோவில், விழுப்புரம், திருப்பூர், ஆத்தூர், ஆகிய ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தியை ஏலம் எடுத்தனர்.
இதில் பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 639-க்கும், குறைந்தபட்சமாக 5 ஆயிரத்து 1-க்கும், சராசரியாக ரூ.5 ஆயிரத்து 473-க்கும் விலைபோனது.

Related Tags :
Next Story