எல்லை சாலை கழகத்தில் 778 பணியிடங்கள்
எல்லை சாலை கழகத்தில் 778 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
எல்லை சாலைகள் கழக நிறுவனம் சுருக்கமாக பி.ஆர்.ஓ. (BRO) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட், எலக்ட்ரீசியன், வெகிகிள் மெக்கானிக், மல்டி ஸ்கில் ஒர்க்கர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 778 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டிரைவர் பணிக்கு 388 இடங்களும், எலக்ட்ரீசியன் பணிக்கு 101 இடங்களும், வெகிகிள் மெக்கானிக் பணிக்கு 92 இடங்களும், மல்டி ஸ்கில் ஒர்க்கர் பணிக்கு 197 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மல்டி ஸ்கில் ஒர்க்கர் பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மல்டி ஸ்கில் ஒர்க்கர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், மெக்கானிக், எலக்ட்ரீசியன் சான்றிதழ் பெற்றவர்கள் அந்தந்த பணிகளுக்கும், டிரைவர் லைசென்சு பெற்றவர் டிரைவர் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
பொது பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பி.சி. பிரிவினர் ஆகியோர் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். அறிவிப்பில் இருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு ஜூன் 1-7 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய விரிவான விவரங்களை அந்த இதழிலோ அல்லது http://www.bro.gov.in/ என்ற இணையதள பக்கத்திலோ பார்க்கலாம்.
Related Tags :
Next Story