தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14-ந்தேதி நடக்கிறது
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி நடைபெறும் தொகுதி-4 பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெயரினை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன் வருகிற 14-ந்தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.
அசல், நகல் சான்றிதழ்கள்
மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் மூலம் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளன. இந்த முகாமில் 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் இளநிலை பட்டம், முதுநிலை பட்டம், என்ஜினீயரிங், பி.டெக் படித்தவர்களும் (வயது வரம்பு 18 முதல் 35-க்குள்) கலந்து கொள்ளலாம்.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (டி.சி, மதிப்பெண் பட்டியல், குடும்ப அட்டை, ஆதார் கார்டு) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இதனை தவறவிடாமல் முகாம் நடைபெறும் அன்று காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆஜராகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான பயணப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story