நெல்லை கைலாசநாதர் கோவிலில் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் சுவாமி–அம்பாள் வீதிஉலா


நெல்லை கைலாசநாதர் கோவிலில் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் சுவாமி–அம்பாள் வீதிஉலா
x
தினத்தந்தி 12 Jun 2019 3:00 AM IST (Updated: 11 Jun 2019 8:02 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி சுவாமி–அம்பாள் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா சென்றனர்.

நெல்லை, 

நெல்லை கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி சுவாமி–அம்பாள் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி திருவிழா 

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் கைலாசநாதர்–சவுந்திரவள்ளி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 2–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி–அம்பாள் வீதி உலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

சுவாமி–அம்பாள் வீதிஉலா 

இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையும், கைலாசநாதர்–சவுந்திரவள்ளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. காலை 8 மணிக்கு சுவாமி–அம்மாள், அஸ்திரதேவர் மேளதாளம் முழங்க கோவிலில் இருந்து தாமிரபரணி ஆற்றின் தைப்பூச மண்டப படித்துறைக்கு எழுந்தருளினர். அங்கு சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரியும் நடந்தது.

இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு கைலாசநாதர்–சவுந்திரவள்ளி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் வீதிஉலா சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் கொடியிறக்கம் நடந்தது.
1 More update

Next Story