மாவட்ட செய்திகள்

திருச்சி உய்யகொண்டான் கால்வாய் கரையோரம் ரூ.17½ கோடியில் நவீன பூங்கா, நடைபயிற்சி தளம் அமைக்கும் பணி தீவிரம் + "||" + Trichy Viyyagukon Canal Canal is a modern park with a 17 ½ கோ.

திருச்சி உய்யகொண்டான் கால்வாய் கரையோரம் ரூ.17½ கோடியில் நவீன பூங்கா, நடைபயிற்சி தளம் அமைக்கும் பணி தீவிரம்

திருச்சி உய்யகொண்டான் கால்வாய் கரையோரம் ரூ.17½ கோடியில் நவீன பூங்கா, நடைபயிற்சி தளம் அமைக்கும் பணி தீவிரம்
திருச்சி உய்யகொண்டான் கால்வாய் கரையோரம் ரூ.17½ கோடியில் 2½ கி.மீ..தூரம் பூங்கா மற்றும் நடைபயிற்சி தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருச்சி,

திருச்சி மாநகரம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பொலிவுறு நகரமாக்க கடந்த சில மாதங்களாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் திறந்த வெளி பூங்்காக்்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை ஆகிய 4 கோட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.


வாகன போக்குவரத்துக்கு தீர்வு காணும் வகையில் புலிவார்டு சாலையில் ரூ.20 கோடியில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. இதுபோல தில்லைநகர் 7-வது குறுக்குத்தெருவில் ரூ.15 கோடி செலவில் வணிக வளாகம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. சத்திரம் பஸ் நிலையம் ரூ.17½ கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது.

ரூ.17½ கோடி

இப்படி பல்வேறு பணிகள் நடக்க உள்ளன. அவற்றில் ஒரு பணிதான் உய்ய கொண்டான் கால்வாய் கரையோரம் ரூ.17 கோடியே 56 லட்சம் செலவில் நவீன பூங்காங்கள் அமைத்து கரையை மேம் படுத்தும் பணி ஆகும். அந்த பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

திருச்சி கோ-அபிஷேக புரம் கோட்டத்திற்குட்பட்ட வண்ணாரப்பேட்டை படித்துறை அருகில் புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் செட்டிப்பாலத்தில்(எம்.ஜி.ஆர்.சிலை) இருந்து உய்ய கொண்டான் கால்வாய் கரையோரம் ஆறுகண் பாலம் வரை 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அங்கு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உய்யகொண்டான் கால்வாய் கரையில் 3 நவீன பூங்காக்கள் அமைவதோடு, கரைகளும் பலப் படுத்தப்படுகின்றன. திறந்தவெளி அரங்கு, கண் காணிப்பு கேமராக்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி, சுற்றுச்சுவர் அமைத்தல், நடைபாதை பயிற்சிக்கான தளம் அமைத்தல், மின் விளக்கு வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகிறது.

பிளாட் போட்டு விற்பனை

உய்யகொண்டான் கால்வாயில் இருந்து கல்லாங்காடு பகுதி உள்ளது. இங்கு விவசாய நிலங்களே அதிகமாக இருந்தன. விவசாய நிலங்களை பிளாட் போட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் விற்பனை செய்து வருகிறார்கள். எனவே, விவசாய நிலப்பகுதி குறைந்து விட்டாலும் உய்யகொண்டான் கால்வாயிலிருந்து கரையின் குறுக்கே தண்ணீர் செல்ல வசதியாக 3-க்கும் மேற்பட்ட இடங்களில் மதகு அமைக்கப்பட்டுள்ளது. அதை அடைத்து விடாமல் தரைப்பாலம் அமைக்கும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள 47 ஏக்கர் பரப்பளவிலான மாநகராட்சி குப்பை கிடங்கை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தூய்மையாக்கும் பணியும் நடந்து வருகிறது. 7.59 லட்சம் கனமீட்டர் அளவுக்கு தேங்கி கிடக்கும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்ட முறையில் ரூ.49 கோடி செலவில் பயோ-மைனிங் முறையில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் அங்கு கட்டிடங்கள்போக மீதமுள்ள இடங்களில் பூங்கா, நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவையும் அமைக்கப்படுகிறது. குப்பைகளில் இருந்து கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், பழைய துணிகள், டயர் போன்றவைகளை சிறிது சிறிதாக அரைத்து நிலக்கரியுடன் சேர்த்து சிமெண்டு தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. விளாங்குடியில் ரூ.6 லட்சத்தில் 3 ஏரிகளை தூர்வாரும் பணி தொடக்கம்
ரூ.6 லட்சம் செலவில் விளாங்குடியில் உள்ள வடுகனேரி, புது ஏரி, செட்டிக்குட்டை ஏரி ஆகிய 3 ஏரிகளை தூர்வாரி புனரமைக்கும் பணியை நேற்று தொடங்கினர்.
2. தஞ்சையில் வீட்டை ஜாக்கி மூலம் உயர்த்தும் பணி மும்முரம்
தஞ்சையில் வீட்டை ஜாக்கி மூலம் உயர்த்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
3. தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டங்களின் கீழ் ரூ.13 கோடியில் பூங்காக்கள் அமைக்கும் பணி தீவிரம்
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டங்களின் கீழ் ரூ.13 கோடியில் பூங்காக்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4. அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி தீவிரம்
அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி ஆய்வு செய்தார்.
5. 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணி தேர்தல் முடிந்ததும் தொடங்கப்படுமா?
11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணி தேர்தல் முடிந்ததும் தொடங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை