செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்; 2 பேர் பலி


செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2019 9:30 PM GMT (Updated: 11 Jun 2019 9:04 PM GMT)

செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த திருமணி ஊராட்சியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 52). இவர் திருக்கழுக்குன்றம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கிராமம் அம்பாள் நகரை சேர்ந்த முருகன் (52), அவரது மனைவி தமிழ்ச்செல்வி (50) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் வழியாக செங்கல்பட்டு நோக்கி சென்றனர்.

இவர்களது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்தபடி மற்றொரு மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்த மானாமதி அருகேயுள்ள தபால் நிலையத்தில் தபால் அதிகாரியாக வேலை செய்யும் லூயிஸ் (51) செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். திருப்போரூர் கூட்ரோடு அருகே செல்லும்போது முனுசாமி ஒட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி, லூயிஸ் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story