வானவில் :பயிர்களை கண்காணிக்கும் டார்சான் ரோபோ


வானவில் :பயிர்களை கண்காணிக்கும் டார்சான் ரோபோ
x
தினத்தந்தி 12 Jun 2019 10:06 AM GMT (Updated: 12 Jun 2019 10:06 AM GMT)

விவசாயத்திற்கு உதவும் பல ரோபோக்களை வானவில் இதழில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளது டார்சான் ரோபோ.

டார்சான் என்னும் ஆங்கில படத்தில் ஹீரோ குரங்குகளை போல தொங்கிக் கொண்டே திரிவதை போல இந்த ரோபோவும் வயல்வெளிகளின் மேலே வயர்களின் மீது தொங்குகிறது. பயிர்களை மேலே இருந்தபடியே இது கண்காணித்து விவசாயிகளுக்கு செல்போன் மூலம் தகவல் அனுப்புகிறது.

மழை, வெயில் எல்லாவற்றையும் தாக்குப்பிடித்து தனது வேலையை செய்கிறது டார்சான். பயிர்களை தாக்கும் பூச்சிகள், களைகள் போன்றஅவ்வப்போது நேரடியாக கண்காணிக்க வேண்டிய வேலையை குறைத்துள்ளது இந்த தொங்கும் ரோபோ. பெரிய வயல்களில் இந்த வேலைகளை செய்வதற்கு ஆட்கள் பணியமர்த்தப்படுவர். அந்த செலவையும் இந்த ரோபோ குறைத்து விடும். விவசாயிகளின் வேலைகளையும், செலவுகளையும் பாதியாக குறைத்து விடுகிறது டார்சான் ரோபோ. இதனை சோலார் தொழில்நுட்பத்தில் இயக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.

Next Story