மாவட்ட செய்திகள்

ஒரத்தநாடு அருகே விவசாயி கொலை: போலீஸ் தேடிய தொழிலாளி கைது + "||" + Farmer killed near Oorathnadu: Police searching worker arrested

ஒரத்தநாடு அருகே விவசாயி கொலை: போலீஸ் தேடிய தொழிலாளி கைது

ஒரத்தநாடு அருகே விவசாயி கொலை: போலீஸ் தேடிய தொழிலாளி கைது
ஒரத்தநாடு அருகே விவசாயி கொலை வழக்கில் போலீஸ் தேடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் வடக்குநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது40). விவசாயி. சம்பவத்தன்று இரவு இவர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்துக்கு சென்றார். இதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் தேடினர். இந்தநிலையில் ஜெயக்குமார் தோட்டத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.


இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயக்குமார் தோட்டத்தில் கடந்த 5 மாதங்களாக தங்கியிருந்து வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டம் ஆ.குரும்பலூர் பகுதியை சேர்ந்த நல்லு மகன் ராமன் (54) என்பவர் திடீரென தலைமறை வானது தெரியவந்தது.

இதனால் ராமர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் ராமரை தேடிவந்தனர். இந்நிலையில் ராமர் போலீஸ் பிடியில் சிக்கினார்.

அவரை போலீசார் திருவோணம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தோட்ட உரிமையாளர் ஜெயக்குமார் தனக்கு கூலி வழங்காததால் ஆத்திரமடைந்த ராமர், ஜெயக்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு

அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராமனை கைது செய்து ஒரத்தநாடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளகோவிலில் கொலை செய்து புதைக்கப்பட்ட நிதிநிறுவன அதிபர் -மனைவியின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை; அக்காள் உள்பட 2 பேர் கைது
வெள்ளகோவிலில் கொலை செய்து புதைக்கப்பட்ட நிதி நிறுவன அதிபர், அவருடைய மனைவி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக நிதி நிறுவன அதிபரின் அக்காள் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. திருவெண்ணெய்நல்லூர் அருகே, செல்போன் கடை ஊழியர் அடித்துக்கொலை - 3 பேர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே செல்போன் கடை ஊழியரை அடித்துக் கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. ஆவடி அருகே கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது; முன்விரோதம் காரணமாக நண்பர்கள் கொன்றார்களா? என விசாரணை
ஆவடி அருகே அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், வாலிபர்அடையாளம் காணப்பட்டார். முன்விரோதம் காரணமாக நண்பர்களே அழைத்து சென்று கொலை செய்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4. சின்னசேலத்தில் விவசாயி திடீர் சாவு
சின்னசேலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயி திடீரென இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
5. மனைவியை எரித்து கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை - கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை எரித்துக்கொன்ற விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-

ஆசிரியரின் தேர்வுகள்...