நன்னிலம் அருகே வளப்பாறு தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


நன்னிலம் அருகே வளப்பாறு தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:30 PM GMT (Updated: 12 Jun 2019 6:59 PM GMT)

நன்னிலம் அருகே உள்ள வளப்பாறு தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வளப்பாறு உள்ளது. இந்த ஆறு நன்னிலம் அருகே உள்ள வடவேரில் தொடங்கி நாகூர் அருகே நரிமணம் வரை 35 கி.மீ. நீளம் வரை செல்கிறது. இந்த ஆற்றின் மூலம் பருத்தியூர், புளிச்சக்காடி, நாடாகுடி, மூங்கில்குடி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில், 30-க்கும் மேற்பட்ட வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 943 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் வளப்பாறு மிகவும் தூர்ந்து போய் செடி, கொடிகள் மண்டி புதர்போல் காட்சி அளிக்கிறது.

தூர்வார வேண்டும்

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்குள் வளப்பாற்றை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story