மாவட்ட செய்திகள்

திருபுவனையில் பரிதாபம்; கீரை பறிக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலி + "||" + Went to snatch the spinach 2 women kills electricity hit

திருபுவனையில் பரிதாபம்; கீரை பறிக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலி

திருபுவனையில் பரிதாபம்; கீரை பறிக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலி
திருபுவனையில் தோட்டத்தில் கீரை பறிக்க சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
திருபுவனை,

புதுவை மாநிலம் திருபுவனை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் செங்கேணி(வயது60), விஜயா(55). கணவனை இழந்த இவர்கள் இருவரும் கீரை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். திருபுவனை பகுதியில் உள்ள வயல்வெளிகளுக்கு சென்று கீரைகளை பறித்து வந்து பஜாரில் வைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.


திருபுவனையில் உள்ள தனியாருக்கு சொந்தமான வயலில் கீரை பறிப்பதற்காக நேற்று முன்தினம் மாலையில் 2 பெண்களும் சென்றனர். இவர்கள் அங்கு செல்வதற்கு சற்று முன்னதாக திருபுவனை, மதகடிப்பட்டு, கண்டமங்கலம் பகுதியில் சூறைக் காற்று வீசியது. இதனால் அந்த பெண்கள் சென்ற வயல் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது.

இதை கீரை பறிக்கச் சென்ற செங்கேணி, விஜயா ஆகியோர் கவனிக்கவில்லை. எதிர்பாராதவிதமாக அதை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வயலுக்குள் அவர்கள் இறந்து கிடந்தது யாருக்கும் தெரியாமல் போனது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை அந்த வழியாக சென்ற ஒரு மாடு மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி அலறியது. இந்த அசம்பாவிதத்தை அறிந்து மாட்டை ஓட்டி வந்தவர் சமயோசிதமாக கயிறை பிடித்து இழுத்து அதை காப்பாற்றினார். அப்போது தான் வயலுக்குள் ஏற்கனவே 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலியாகி கிடப்பதை கண்டு ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தார்.

இதுபற்றி மின்துறைக்கு தெரிவிக்கப்பட்டதன்பேரில் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி வயலுக்கு சென்ற 2 பெண்கள் பலியானது பற்றிய தகவல் அறிந்து அங்கு ஏராளமானோர் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் விரைந்து சென்று பலியான 2 பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான பெண்களின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. புஞ்சைபுளியம்பட்டி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் பணம் கேட்டு தாக்குதல்; போலி நிருபர் உள்பட 7 பேர் கைது
புஞ்சைபுளியம்பட்டி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் பணம் கேட்டு தாக்கிய போலி நிருபர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. மயிலாடுதுறை அருகே மொபட்–மோட்டார் சைக்கிள் மோதல்: சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பலி
மயிலாடுதுறை அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பரிதாபமாக பலியானார்.
3. வெறிநாய்கள் கடித்து 300 ஆடுகள் சாவு: இழப்பீடு கோரி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
தாராபுரம் பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் 300 ஆடுகள் செத்தன. இவற்றுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. வெடி விபத்தில் 3 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
மத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. ஆரணி அரசு மருத்துவமனையில் பிளஸ்–2 மாணவன் திடீர் சாவு டாக்டர்கள் மீது உறவினர்கள் புகார்
ஆரணி அரசு மருத்துவமனையில் பிளஸ்–2 மாணவன் திடீரென இறந்தான். சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று டாக்டர்கள் மீது உறவினர்கள் புகார் கூறினர்.