இன்றும், நாளையும் மும்பையில் குடிநீர் வெட்டு


இன்றும், நாளையும் மும்பையில் குடிநீர் வெட்டு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:45 PM GMT (Updated: 12 Jun 2019 9:16 PM GMT)

மும்பைக்கு பட்சா அணையில் இருந்து அதிக அளவில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

மும்பை,

பட்சா அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்வதில் சில தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்தது. இதன் காரணமாக மும்பையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்பட்டது.

இதற்கு மும்பை மாநகராட்சி விளக்கம் அளித்து உள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பட்சா அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்வதில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) மும்பையின் பல பகுதிகளில் 10 முதல் 15 சதவீதம் குடிநீர் வெட்டு அமலில் இருக்கும்” என்றார்.

Next Story