திருவையாறு அருகே தீயில் எரிந்து 4 கூரை வீடுகள் நாசம் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்


திருவையாறு அருகே தீயில் எரிந்து 4 கூரை வீடுகள் நாசம் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 14 Jun 2019 3:45 AM IST (Updated: 14 Jun 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே தீயில் எரிந்து 4 கூரை வீடுகள் நாசமடைந்தன. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுப்படுகை கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் இந்த தீ அருகே இருந்த சதீ‌‌ஷ் (வயது27), ராகவன் (28), மகாலிங்கம் ஆகியோரின் கூரை வீட்டுக்கும் பரவியது.

ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

இதில் வீடுகளில் இருந்த நகை, பீரோ, கட்டில், குளிர்சாதன ெபட்டி, ேமாட்டார் ைசக்கிள்கள், கிரைண்டர், பாத்திரங்கள், துணி, அரிசி, காசு, ஆதார்கார்டு, ரேஷன் கார்டு, ஆகியவை எரிந்து நாசமடைந்தன.. இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு ெசன்று தீைய அணைத்தனர். தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Next Story