மாவட்ட செய்திகள்

புளியந்தோப்பில்10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை + "||" + In puliyantop The 10th grade student committed suicide by hanging What is the reason Police investigation

புளியந்தோப்பில்10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை

புளியந்தோப்பில்10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை
புளியந்தோப்பில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திரு.வி.க. நகர், 

சென்னை புளியந்தோப்பு போகிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 51). ஆட்டோ டிரைவரான இவருக்கு அமலா என்ற மனைவியும், மோனிஷாஸ்ரீ (15) என்ற மகளும் இருந்தனர்.

மோனிஷாஸ்ரீ வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை மோனிஷாஸ்ரீ பள்ளிக்கு செல்லவில்லை. மாலையில் டியூசனுக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

அமலாவும், சிவக்குமாரும் வேலைக்கு சென்றதால் மோனிஷாஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்தநிலை யில் சிவக்குமார் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மோனிஷா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து புளியந்தோப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக் கான காரணம்? குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.