முதல்-மந்திரியுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு
மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 16 லட்சத்து 18 ஆயிரத்து 602 மாணவ, மாணவியர் எழுதி இருந்தனர். அண்மையில் வெளியான தேர்வு முடிவின் போது 12 லட்சத்து 47 ஆயிரத்து 903 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
மும்பை,
கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 12.31 சதவீதம் குறைந்தது.மராத்தி மொழி பாடத்தில் அதிகளவில் மாணவர்கள் தோல்வியை சந்தித்தனர்.
இந்தநிலையில், 10-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்தது தொடர்பாக நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே சந்தித்து பேசினார். அப்போது, மொழிப்பாடங்கள் மற்றும் சமூக அறிவியலுக்கு உள்மதிப்பீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அவரது இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாகவும், அந்த நடைமுறை வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆதித்ய தாக்கரேயிடம் உறுதி அளித்ததாக சிவசேனா தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story