மாவட்ட செய்திகள்

வாடகைக்கு வரமறுத்த ஆட்டோ டிரைவரை பாட்டிலால் குத்தியவர் கைது + "||" + Refused to rent Auto Driver Patil Stabbed Arrested

வாடகைக்கு வரமறுத்த ஆட்டோ டிரைவரை பாட்டிலால் குத்தியவர் கைது

வாடகைக்கு வரமறுத்த ஆட்டோ டிரைவரை பாட்டிலால் குத்தியவர் கைது
வாடகைக்கு வரமறுத்த ஆட்டோ டிரைவரை பாட்டிலால் குத்தியவாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை,

சிவகங்கையை சேர்ந்தவர் செந்தில் முருகன் (வயது 42). இவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி அருகில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் இவர் சம்பவத்தன்று மாலை ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்தார். அப்போது சுந்தரநடப்பு கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் (23) என்பவர் அங்கு வந்து, செந்தில்முருகனிடம் ஆட்டோவை வாடகைக்கு அழைத்தாராம்.

அதற்கு தனது ஆட்டோ வாடகைக்கு வராது என்று கூறி மறுத்து விட்டாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

அதில் ஆத்திரமடைந்த விமல்ராஜ், கீழே கிடந்த பாட்டிலை உடைத்து செந்தில் முருகனை சரமாரியாக குத்திவிட்டு, ஆட்டோவையும் அடித்து சேதப்படுத்தினாராம்.

அதில் பலத்த காயம் அடைந்த செந்தில் முருகன் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து விமல்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. கர்ப்பிணிக்கு உதவ ரெயில் நிலையத்துக்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசு
கர்ப்பிணிக்கு உதவ ரெயில் நிலையத்துக்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசை சிவசேனா இளைஞர் அணி வழங்கியது
2. ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளிக்கு பாட்டில் குத்து நண்பர் கைது
ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்தியது தொடர்பாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.
3. நெற்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்துக்கொலை தோழியுடன் மனைவி கைது
நெற்குன்றத்தில், ஆட்டோ டிரைவரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த அவருடைய மனைவி மற்றும் தோழியை போலீசார் கைது செய்தனர்.
4. தனியார் கிளனிக் வரண்டாவில் ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார் கொலையா? போலீஸ் விசாரணை
தனியார் கிளனிக் வரண்டாவில் ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. வீரபாண்டி அருகே, பட்டதாரிக்கு பாட்டில் குத்து; பொதுமக்கள் சாலை மறியல்
வீரபாண்டி அருகே பட்டதாரியை பாட்டிலால் குத்தியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.