அடிப்படை வசதிகோரி, பழனி ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு


அடிப்படை வசதிகோரி, பழனி ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 14 Jun 2019 4:00 AM IST (Updated: 14 Jun 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதி செய்து தரக்கோரி தும்பலப்பட்டி பொதுமக்கள் பழனி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மனு அளித்தனர்.

பழனி, 

பழனி தாலுகா அலுவலகத் தில் நேற்று முன்தினம் முதல் ஜமாபந்தி தொடங்கி நடை பெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், ரேஷன்கார்டு பெறுதல் மற்றும் பிற பொது வான கோரிக்கைகள் தொடர் பாக பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். நேற்று தொப்பம்பட்டி (பிர்கா) குறுவட்டத்துக்கு உட்பட்ட மானூர், அக்கரைப்பட்டி, புதூர், தும்பலப்பட்டி பகுதி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.

இந்தநிலையில் தும்பலப் பட்டி ஊராட்சி காமராஜர் காலனி பகுதி மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் தாலுகா அலு வலகத்துக்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, காமராஜர் காலனியில் சுமார் 250 வீடுகள் உள்ளன. இங் குள்ள மக்களுக்கு குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒரே ஒரு ஆழ்துளை கிணறு மட்டும் அமைக்கப் பட்டுள்ளது.

மேலும் காவிரி கூட்டுக்குடி நீர் திட்டம் கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் பலமுறை கூறப்பட்டது. ஆனால் அவை எதுவும் தற் போது வரை நிறைவேற்றப்பட வில்லை. மேலும் எங்கள் பகுதியில் பொதுகழிப்பிடம் இல்லை. எனவே சாலையோர பகுதி கழிப்பிடமாக மாறி வருகிறது.

இதனால் மக்களுக்கு நோய் கள் உருவாகி வருகின்றன. மேலும் எங்கள் பகுதிக்கு சுடுகாடு வசதியும் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித் தால், அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறி வருகிறார்கள். எனவே எங்கள் பகுதிக்கு குடி நீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறை யாக செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் ஜமாபந்தி யில் கலந்துகொண்டு இது தொடர்பாக தனித்தனியாக மனு அளித்தனர். இதைப் பெற்றுக் கொண்ட அதிகாரி கள் இதுகுறித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதேபோல் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில் சிலுக்குவார் பட்டி, நூத்துலாபுரம், பங்களா பட்டி, சென்னமநாயக்கன் பட்டி, எத்திலோடு, விளாம் பட்டி, பிள்ளையார் நத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 278 மனுக்கள் பெறப்பட்டன. இதில் நிலக் கோட்டை தாசில்தார் நவநீத கிருஷ்ணன், துணை தாசில் தார்கள் மணிமேகலை, ருக் மணி, ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story