மாவட்ட செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை - சரத்குமார் பேட்டி + "||" + In the case of the actor's union elections I do not want to comment - Sarath Kumar interview

நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை - சரத்குமார் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை - சரத்குமார் பேட்டி
நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை என்று சரத்குமார் கூறினார்.

மதுரை,

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தேர்தல் அறிவித்த பின்னர் எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். தேர்தல் என்றால் இரு அணிகள் இருக்கத்தான் செய்யும்.

நான் நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டவன். எனவே நான் உறுப்பினர் இல்லை என்பதால் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. ஒரே அணியில் இருந்தவர்கள் தற்போது இரண்டு அணியாக பிரிந்துள்ளனர். நாங்கள் இருக்கும்போது இதுபோன்று இல்லை.

கடந்த முறை வென்ற அணியும் முன்பு இருந்த அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவு செய்துதான் தேர்தலை சந்தித்தார்கள். தற்போதுகூட புதிதாக உருவாகிய அணி, தற்போதைய நிர்வாகிகள் மேல் குறையைச் சொல்லி எதிரணியில் நிற்கிறார்கள். மொத்தத்தில் சங்கத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும்.

சங்கக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சங்கம் உருவாக்கப்பட்டது. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினையை பொறுத்தவரை எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்பது கிடையாது. இது மக்களின் பிரச்சினை. அனைவரும் ஒன்றுசேர்ந்து அதனை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும், எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சங்கத்தேர்தலில் ஆதரவு ரஜினி, கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்தி பரப்ப வேண்டாம் நடிகர் விஷால் பேட்டி
நடிகர் சங்கத்தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு? என்று ரஜினியும், கமல்ஹாசனும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
2. சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் கடந்தது குறித்து நடிகர் தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
3. சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு
சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு அமைக்கப்பட உள்ளது.
4. மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடலுக்கு அமைச்சர்கள்- நடிகர்கள் அஞ்சலி
மரணம் அடைந்த முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ரித்தீசின் உடலுக்கு அமைச்சர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
5. ‘‘நட்புக்காக வாக்கு சேகரிக்கிறேன்’’ மதுரையில், நடிகர் சமுத்திரகனி பேச்சு
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக நடிகர் சமுத்திரகனி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கட்சிக்கும், கூட்டணிக்கும் அப்பாற்பட்டு நட்புக்காக வாக்கு கேட்கிறேன், என்றார்.