மாவட்ட செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்துவிவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்திருத்துறைப்பூண்டியில் நடந்தது + "||" + Condemned Karnataka government for refusing to give water to Tamil Nadu Farmers Association demonstrated

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்துவிவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்திருத்துறைப்பூண்டியில் நடந்தது

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்துவிவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்திருத்துறைப்பூண்டியில் நடந்தது
தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு விவசாயம் நடைபெறும் பகுதிகளாகும். இந்த பகுதியில் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு முப்போக சாகுபடியாக குறுவை, சம்பா, தாளடி என மூன்று சாகுபடி நடைபெற்று வந்தது.

ஆனால் கடந்த 8 ஆண்டு களாக மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததாலும் பருவமழை போதி அளவு மழை இல்லாததாலும், விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் வெவ்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சாமிநாதன், மாவட்ட தலைவர் தம்புசாமி, மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைச்செயலாளர் ஜெயப்பிரகாஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் மணியன், ஒன்றிய செயலாளர் வீரமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் கதிரேசன், நகர தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றிய தலைவர்கள் கோவிந்தராஜ், துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடசியின் ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், நகர செயலாளர் ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன.