மாவட்ட செய்திகள்

மாநகராட்சி ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் : 2 பேர் கைது + "||" + Attack on municipal employees: 2 arrested

மாநகராட்சி ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் : 2 பேர் கைது

மாநகராட்சி ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் :  2 பேர் கைது
தானேயில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தானே,

தானே ஓவ்லா பகுதியில் உள்ள ஒரு இடம் போலீஸ் நிலையம் மற்றும் தபால் அலுவலகம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

இதுபற்றி மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்படி நேற்று மாநகராட்சி ஊழியர்கள் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஊழியர்களை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி காசர்வடவலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு - வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது
ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் தான் என அமெரிக்கா நேரடியாக குற்றம் சுமத்தி உள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
2. பெரியகுளத்தில், வாலிபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியல்
வாலிபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பெரியகுளத்தில் சாலைமறியல் நடந்தது.
3. ஒடிசா மாநிலம்: பானி புயல் தாக்கி 1 மாதம் ஆகியும் இருளில் தவிக்கும் 1½ லட்சம் வீடுகள்
ஒடிசா மாநிலத்தில் பானி புயல் தாக்கி 1 மாதம் ஆகியும் 1½ லட்சம் வீடுகள் இருளில் தவிக்கின்றன.
4. சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்: ‘அரபு நாடுகளின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை’ - ஈரான் திட்டவட்டம்
சரக்கு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, அரபு நாடுகளின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஈரான் தெரிவித்துள்ளது.
5. சவுதி அரேபிய கப்பல்கள் தாக்குதல் பின்னணியில் ஈரான் - அமெரிக்கா குற்றச்சாட்டு
சவுதி அரேபிய கப்பல்கள் தாக்குதல் பின்னணியில் ஈரான் உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை